ADDED : ஜூன் 16, 2025 06:25 AM
சென்னை: விருதுநகர் கலெக்டர் ஜெயசீலன், பள்ளி படிப்பை கைவிட்ட மாணவனை நேரில் சந்தித்து, கல்வியை தொடர அறுவுறுத்திய வீடியோவை, தன் சமூக வலைதளத்தில் பகிர்ந்து முதல்வர் வெளியிட்ட அறிக்கை:
கடந்த நான்கு ஆண்டுகளில் இடைநிற்றலே இல்லாத மாநிலமாக, தமிழகத்தை உயர்த்தி உள்ளோம். இந்நிலை தொடர வேண்டும். ஆசிரியர்களுக்கும், பொதுமக்களுக்கும் என் வேண்டுகோள். உங்கள் பகுதியில் பள்ளி செல்லாத மாணவர்கள் இருந்தால் கண்டறியுங்கள். கல்வியை மிஞ்சிய செல்வம் எதுவும் இல்லை என, அவர்களுக்கு உணர்த்துங்கள்.
காலை உணவு திட்டம், ஸ்மார்ட் வகுப்பறைகள், நான் முதல்வன், புதுமைப் பெண், தமிழ்ப்புதல்வன் என ஒவ்வொரு நிலையிலும், அவர்களை கைப்பிடித்து அழைத்துச் செல்ல, அரசின் திட்டங்கள் இருப்பதை எடுத்துக் கூறுங்கள். கல்வியில் சிறந்த தமிழகம் என்பதை உறுதி செய்வோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுஉள்ளது.