உளுந்துார்பேட்டை அருகே கிராம சபை கூட்டத்தில் மோதல்
உளுந்துார்பேட்டை அருகே கிராம சபை கூட்டத்தில் மோதல்
ADDED : ஜன 27, 2024 06:43 AM
உளுந்தூர்பேட்டை : கிராம சபா கூட்டத்தில் கேள்வி கேட்டவர்களை ஊராட்சி மன்ற தலைவர் தரப்பினர் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
உளுந்தூர்பேட்டை தாலுகா செம்மணங்கூர் ஊராட்சி புதூரில் குடியரசு தினத்தையொட்டி சிறப்பு கிராம சபா கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் விஜயராணி தலைமை தாங்கினார்.
கூட்டத்ததில் தெரு விளக்கு பராமரிப்பு, குடிநீர் குழாய் பைப்லைன் பராமரிப்பு போன்ற பணிகளுக்காக கடந்த இரண்டு மாதத்தில் ரூ.2 லட்சத்துக்கு மேல் செலவினம்மேற்கொள்ளப்பட்டது எனகிராம சபை கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
அப்போது ஊராட்சியின் 7வது வார்டு கவுன்சிலர் சோக்கேஷ் மற்றும் சிலர் தெரு விளக்கு போடவே இல்லை என்றும், தண்ணீர் வரவில்லை என்றும் செய்யாத பணிகளுக்கு செலவு மேற்கொள்ளப்பட்டதாக தவறான செலவின கணக்கை காண்பிக்கிறீர்கள் என கேள்வி எழுப்பினர்.
இதனால் ஆவேசம் அடைந்த ஊராட்சி மன்றதலைவர் விஜயரணி மற்றும்அவரது சகோதரரான முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயசீலன் ஆகியோர் கேள்வி கேட்டவர்களிடம் வாக்குவாதம் செய்து தாக்கினர்.
இதுகுறித்து இரு தரப்பினரும் உளுந்தூர்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

