ADDED : செப் 27, 2025 02:04 AM
திருவாரூர்:திருவாரூர் எம்.எல்.ஏ., குறித்து, முகநுாலில் அவதுாறு பரப்பியதாக, தி.மு.க., தகவல் தொழில்நுட்ப அணியினர், சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தனர்.
திருவாரூரில், செப்., 20ம் தேதி, த.வெ.க., சார்பில், மக்கள் சந்திப்பு பிரசார பொதுக்கூட்டம் நடந்தது. இதில், அக் கட்சி தலைவர் விஜய் பேசினார். இக்கூட்டத்தில், பல ஆயிரக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்றனர்.
இதையடுத்து மறுநாள், விஜய் பேசிய அதே இடத்தில், தி.மு.க., சார்பில் பொதுக்கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்திலும் பல ஆயிரக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்றனர்.
மறுநாளே தி.மு.க., கூட்டம் நடத்தியதால் ஆத்திரமடைந்த சிலர், திருவாரூர் தொகுதி எம்.எல்.ஏ., பூண்டி கலைவாணன் மீது, எட்டு முகநுால் கணக்கில், அவதுாறு கருத்து பதிவிட்டனர்.
இதை அறிந்த, திருவாரூர் மாவட்ட தி.மு.க., தகவல் தொழில்நுட்ப அணியினர், நேற்று, திருவாரூர் மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தனர். போலீசார், 5 பிரிவு களில் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

