ADDED : ஜூன் 06, 2025 02:36 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருநெல்வேலி:அரசு பஸ் மோதியதில் கூட்டுறவு சங்க செயலர் பலியானார்.
திருநெல்வேலி மாவட்டம் பணகுடி மகேந்திரகிரியில் இஸ்ரோ விண்வெளி ஆய்வு மையம் உள்ளது. அங்குள்ள கூட்டுறவு சங்கத்தின் செயலராக மூக்கையா, 53, பணியாற்றினார்.
தினமும் வள்ளியூரில் இருந்து டூ-வீலரில் பணிக்கு வந்து சென்றார். நேற்று காலை, திருநெல்வேலி-கன்னியாகுமரி நான்குவழிச் சாலையில் தண்டையார்குளம் பகுதியில் சென்றபோது பின்னால் வந்த அரசு விரைவு பஸ், அவரின் டூ-வீலர் மீது மோதியது.
இதில், அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். பணகுடி போலீசார் விசாரிக்கின்றனர்.