ADDED : ஜன 01, 2024 06:26 AM

ராமேஸ்வரம் : தொடர் விடுமுறையொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். நேற்று முதல் தினமும் லட்டு பிரசாதம் வழங்கப்படுகிறது.
பள்ளி அரையாண்டு தேர்வு விடுமுறை, பண்டிகை விடுமுறையால் நேற்று ராமேஸ்வரம் கோயிலுக்கு தமிழகத்தின் பல பகுதியில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்தனர்.
இவர்கள் கோயில் வளாகத்தில் உள்ள 22 தீர்த்தங்களில் காத்திருந்து நீராடினர். பின் கோயிலில் சுவாமி, அம்மன் சன்னதியில் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர். கோயில் சுற்றுப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
தினமும் லட்டு பிரசாதம் :
தமிழகத்தில் முக்கியமான 5 கோயில்களில் பக்தர்களுக்கு தினமும் பிரசாதம் வழங்கும் திட்டத்தை அமைச்சர் சேகர்பாபு சென்னையில் துவக்கினார்.
அதன்படி நேற்று ராமேஸ்வரம் கோயிலில் பக்தர்களுக்கு லட்டு பிரசாதத்தை நகராட்சி தலைவர் நாசர்கான் வழங்கினார் .
இணை ஆணையர் சிவராம்குமார், துணை ஆணையர் பாஸ்கரன் பங்கேற்றனர்.

