sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

மாநகராட்சிகளில் ஊழல் பணத்தை பிரிப்பதில் தகராறு: இபிஎஸ்

/

மாநகராட்சிகளில் ஊழல் பணத்தை பிரிப்பதில் தகராறு: இபிஎஸ்

மாநகராட்சிகளில் ஊழல் பணத்தை பிரிப்பதில் தகராறு: இபிஎஸ்

மாநகராட்சிகளில் ஊழல் பணத்தை பிரிப்பதில் தகராறு: இபிஎஸ்


UPDATED : செப் 01, 2025 10:45 PM

ADDED : செப் 01, 2025 08:32 PM

Google News

UPDATED : செப் 01, 2025 10:45 PM ADDED : செப் 01, 2025 08:32 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பரங்குன்றம் : ''தமிழகம் முழுவதும் பல மாநகராட்சிகளில் ஊழல் செய்த பணத்தைப் பிரிப்பதில் தகராறு ஏற்பட்டு, திமுக கவுன்சிலர்களே மேயருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருகிறார்கள்,'' என அதிமுக பொதுச்செயலர் இபிஎஸ் கூறியுள்ளார்.

'மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்' சுற்று பயணத்தில் மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் அதிமுக பொதுச்செயலர் இபிஎஸ் பேசியதாவது: மதுரை மாநகராட்சியில் 200 கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளது. அதில் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேயரின் கணவரும் கைது செய்யப்பட்டுள்ளார். மேயரின் ஒத்துழைப்பு இல்லாமல் முறைகேடு நடந்திருக்க முடியாது.

எனவே, மதுரை மேயர் கைது செய்யப்பட வேண்டும். மதுரை மேயரைக் காப்பாற்ற திமுக அரசு முயல்கிறது. தமிழகம் முழுவதும் பல மாநகராட்சிகளில் ஊழல் செய்த பணத்தைப் பிரிப்பதில் தகராறு ஏற்பட்டு, திமுக கவுன்சிலர்களே மேயருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருகிறார்கள். காஞ்சிபுரம், நெல்லை, கோவையிலும் இவ்வாறு நடந்துள்ளது. மற்ற நகர்ப்புற பகுதிகளிலும் ஊழல்கள் நடந்துள்ளது.

டிஜிபி பதவியைக் கூட உரிய நேரத்தில் நியமிக்க முடியாத, கையாலாகாத அரசு திமுக அரசு. புதிய டிஜிபி தகுதியின் அடிப்படையில் நியமிக்கப்படவில்லை. 8 டிஜிபிக்கு பிறகு 9வது டிஜிபியாக இருப்பவர் பொறுப்பு டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. ஓய்வுபெறும் நாள் இந்த அரசுக்கு முன்பே தெரிந்தும், திட்டமிட்டு தங்களுக்கு வேண்டப்பட்டவரை நியமிப்பதற்காக சட்டப்படி நடந்து கொள்ளவில்லை.

இதனால், தகுதியுள்ள 8 டிஜிபிக்கள் பதவியேற்பு நிகழ்வில் கலந்துகொள்ளவில்லை. காவல் துறையிலேயே சரிவு ஏற்பட்டுள்ளது. நாட்டை ராணுவம் பாதுகாக்கிறது, மக்களை காவல்துறை பாதுகாக்கிறது. மக்களைக் காக்கிற காவல்துறையின் டிஜிபி பதவியைக் கூட உரிய காலத்தில் நியமிக்க முடியாத அளவுக்கு திமுக அரசு சென்றுவிட்டது.

மக்களுடைய பிரச்னை தெரியாதவர்கள் எல்லாம் அமைச்சர்களாக இருக்கிறார்கள். இப்படியெல்லாம் விமர்சனம் செய்தால் உங்களுக்கு அடுத்தாண்டு தேர்தலில் டெபாசிட் கூட கிடைக்காது. நான்கு ஆண்டுகள் தூங்கிவிட்டு தேர்தல் வருவதால் தந்திரமாக ஏமாற்றுகிறார்கள். உங்களுடன் ஸ்டாலின் திட்டத்திற்கு வாங்கப்பட்ட மனுக்கள் திருப்புனவத்தில் ஆற்றில் வீசி எறியப்பட்டுள்ளது. எந்தளவுக்கு மக்களை மதிக்கிறார்கள் என்று பாருங்கள். இவர்களா மக்களை காப்பாற்றுவார்கள்?. இவ்வாறு இபிஎஸ் பேசினார்.

முற்றுப்புள்ளி

திருமங்கலம் பகுதியில் இபிஎஸ் பேசியதாவது: கிராமப் புறங்களில் உள்ள ஏழை எளிய அரசுப் பள்ளி மாணவர்களும் மருத்துவராக வேண்டும் என்ற கனவை நனவாக்க, 7.5% உள் இடஒதுக்கீடு வழங்கினோம். அதன்மூலம் 2818 பேர் ஒரு ரூபாய் செலவில்லாமல் இலவசமாக மருத்துவம் படித்து இப்போது மருத்துவர் ஆகியிருக்கிறார்கள். பள்ளிகளை தொடர்ச்சியாக தரம் உயர்த்தி அதிக பள்ளிகளைத் திறந்தோம். ஆனால் திமுக ஆட்சியில் 207 அரசுப் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. திருமங்கலம் தொகுதியில்தான் எய்ம்ஸ் வருகிறது. திமுக அரசு அழுத்தம் கொடுத்து பணிகளை முடிக்க முடியவில்லை. மதுரைக்கு எந்த ஒரு பெரிய திட்டமும் கொண்டுவரவில்லை. அதிமுக ஆட்சியில் எல்லா துறைகளுமே சிறப்பாக செயல்பட்டது ஊழல் செய்தததுதான் திமுகவின் சாதனை. அடுத்தாண்டு தேர்தல் குடும்ப ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் தேர்தல். இவ்வாறு அவர் பேசினார்.








      Dinamalar
      Follow us