sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

துணை ஜனாதிபதி தேர்தலில் மாற்றி ஓட்டளித்த திமுக எம்பிக்கள்: காங்கிரஸ் புகாரால் ஸ்டாலின் கோபம்

/

துணை ஜனாதிபதி தேர்தலில் மாற்றி ஓட்டளித்த திமுக எம்பிக்கள்: காங்கிரஸ் புகாரால் ஸ்டாலின் கோபம்

துணை ஜனாதிபதி தேர்தலில் மாற்றி ஓட்டளித்த திமுக எம்பிக்கள்: காங்கிரஸ் புகாரால் ஸ்டாலின் கோபம்

துணை ஜனாதிபதி தேர்தலில் மாற்றி ஓட்டளித்த திமுக எம்பிக்கள்: காங்கிரஸ் புகாரால் ஸ்டாலின் கோபம்


UPDATED : செப் 14, 2025 06:43 AM

ADDED : செப் 14, 2025 06:38 AM

Google News

UPDATED : செப் 14, 2025 06:43 AM ADDED : செப் 14, 2025 06:38 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

துணை ஜனாதிபதி தேர்தலில், தமிழகத்தைச் சேர்ந்த சி.பி. ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்று பதவியில் அமர்ந்துவிட் டார். ஆனால், இந்த தேர்தல் முடிவுகள் தி.மு.க.,விற்கும், காங்கிரசுக்கும் இடையே புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது. ராதாகிருஷ்ணனுக்கு தேசிய ஜனநாயகக் கூட்டணி சார் பாக, 438 ஓட்டுகள் கிடைத்திருக்க வேண்டும்; ஆனால் 452 ஓட்டுகள் கிடைத்தன. எதிர்த்து நின்ற உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி சுதர்ஷன் ரெட்டிக்கு கிடைத்தது, 300 ஓட்டுகள்; இதில், 15 செல்லாதவை.

'இண்டி' கூட்டணியிலிருந்து யார் ராதாகிருஷ்ணனுக்கு ஓட்டளித்தது? உத்தவ் தாக்கரேவின் சிவசேனா, தி.மு.க., மற் றும் திரிணமுல் காங்., - எம்.பி.,க்கள் ராதாகிருஷ்ணனுக்கு ஓட்டளித்து விட்டனர். 'அத்துடன், எங்கள் கூட்டணி எம்.பி.,க்கள் வேண்டு மென்றே செல்லாத ஓட்டுகள் அளித்து விட்டனர்' என, சில தலைவர்களிடம் சொன்னாராம் காங்கிரஸ் மூத்தத் தலைவர் ஜெய்ராம் ரமேஷ்.

இது, தி.மு.க., தலைமைக்கு தெரிய கோபமடைந்த வந்ததும் மிகவும் முதல்வர் ஸ்டாலின், உடனடியாக காங்., தலைமைக்கு போன் செய்து, 'தி.மு.க.,விலிருந்து யாரும் மாறி ஓட்டளிக்கவில்லை; எதற்கு இப் படி தேவையில்லாத பிரச்னையை ஜெய்ராம் கிளப்புகிறார்' என புகார் அளித்தார்கள். அதன்பின், வாயை மூடிக்கொண்டாராம் ஜெய்ராம்.

'தன் இஷ்டத்திற்கு சமூக வலைதளங்களில், 'டுவிட்' செய்து கொண்டிருக்கிறார் ஜெய்ராம்.இவருக்கும், காங்., தலைமைக்கும் உறவு சரியில்லை' என்கின்றனர் காங்கிரசார். இருப்பினும், -'தி.மு.க., எம்பிக்கள் தான் ராதாகிருஷ்ணனுக்கு ஓட்டளித்தனர் என்ற தன் நிலைப்பாட்டை, ஜெய்ராம் மாற்றிக் கொள்ளவில்லையாம்.






      Dinamalar
      Follow us