ADDED : ஜன 11, 2024 01:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:''இண்டியா கூட்டணியில் இடம் பெற்றுள்ள, 16 கட்சிகளின் மாணவர் அமைப்புகளின் சார்பில் டில்லியில் ஜன., 12ல் பேரணி நடக்கவுள்ளது,'' என, தி.மு.க., மாணவரணி செயலர் எழிலரசன் எம்.எல்.ஏ., கூறினார்.
சென்னை அறிவாலயத்தில் அவரது பேட்டி:
தி.மு.க., மாணவர் அணி உள்ளிட்ட இண்டியா கூட்டணி கட்சிகளின், 16 மாணவர் அமைப்புகள் ஒன்று கூடி, 'யுனைடெட் ஸ்டூடென்ஸ் ஆப் இந்தியா' என்ற அமைப்பு உருவாக்கப்பட்டு உள்ளது.
இந்த அமைப்பு சார்பில், மாணவர்களின் கல்வி உரிமை பாதுகாத்திடும் வகையில், தேசிய கல்வி கொள்கையை நிராகரிப்போம்; கல்வி உரிமையை பாதுகாப்போம் என்ற முழக்கத்துடன், வரும் 12ல், டில்லியில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பங்கேற்கும் பேரணி நடத்தப்படும்.
இவ்வாறு எழிலரசன் கூறினார்.

