sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

கொலையில் கைதானவர் பா.ஜ., நிர்வாகி மகன்; பழனிசாமிக்கு தெரியாதா: அமைச்சர் கேள்வி

/

கொலையில் கைதானவர் பா.ஜ., நிர்வாகி மகன்; பழனிசாமிக்கு தெரியாதா: அமைச்சர் கேள்வி

கொலையில் கைதானவர் பா.ஜ., நிர்வாகி மகன்; பழனிசாமிக்கு தெரியாதா: அமைச்சர் கேள்வி

கொலையில் கைதானவர் பா.ஜ., நிர்வாகி மகன்; பழனிசாமிக்கு தெரியாதா: அமைச்சர் கேள்வி


ADDED : ஜூன் 17, 2025 05:38 AM

Google News

ADDED : ஜூன் 17, 2025 05:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெரம்பலுார் : பா.ம.க., நிர்வாகி கொலை தொடர்பாக, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியின் அறிக்கைக்கு பதிலளித்து, அமைச்சர் சிவசங்கர் வெளியிட்ட அறிக்கை:

அ.தி.மு.க., ஆட்சியில் மலிவு விலைக்கு துப்பாக்கி விற்கப்பட்டதும், அதை வாங்கி கொலைச் சம்பவங்களில் ஈடுபட்டதையும் மக்கள் மறக்கவில்லை.

சட்டம் - -ஒழுங்கை சிறப்பாகப் பாதுகாத்து வருவதால் தான், பொருளாதார வளர்ச்சி 9.69 சதவீதமாக உயர்ந்து, நாட்டிலேயே முதலிடத்தில் தமிழகம் இருக்கிறது.

பா.ம.க., இளைஞரணி மாவட்டச் செயலர் சக்கரவர்த்தி சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில், மூன்றாவது நாளே முக்கிய குற்றவாளிகள் இருவரை போலீசார் கைது செய்துஉள்ளனர்.

ஒருவரின் மரணத்துக்கு தெளிவான காரணம் தெரியாவிட்டால், முதலில் வழக்கு பதிவு, பிறகு மரணத்தில் சந்தேகம் எழுந்தால் அது தொடர்பான பிரிவிலும், கொலை உறுதியானால், கொலை வழக்காகவும் போலீசார் மாற்றுவர்.

அப்படித்தான், சக்கரவர்த்தி வழக்கு, முதலில் மர்ம மரணம் என பதிவானது. பாமரனுக்குக்கூட தெரிந்த இந்த உண்மை, உள்துறையை கையில் வைத்திருந்த முன்னாள் முதல்வர் பழனிசாமிக்கு தெரியாவிட்டால், அந்த பதவியில் அமரவே தகுதி இல்லாதவர்.

பா.ஜ., பிரமுகர் சீனிவாசன் கொலையில் கைதானவர்களுக்கு ஆதரவாக செயல்பட்டதால், பா.ம.க., பிரமுகர் சக்கரவர்த்தி கொலை நடந்துள்ளது.

பா.ம.க.,வை கூட்டணியில் சேர்க்கும் முயற்சியில் இருக்கும் பழனிசாமி, பா.ம.க.,வுக்கு துாது விடுவது போல அறிக்கை விட்டிருக்கிறார்.

அதில், சக்கரவர்த்தியை கொலை செய்தவர், பா.ஜ., நிர்வாகியின் மகன் என்று பழனிசாமி ஏன் சொல்லவில்லை? மலிவான அரசியலில் ஈடுபடுவதற்காக, குற்றச் சம்பவங்களை தேடி பழனிசாமி அலைந்து கொண்டிருக்கிறார்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us