தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/செய்திகள்/தமிழகம்/ ஏப்., 24ல் வரையாடு கணக்கெடுப்பு

 ஏப்., 24ல் வரையாடு கணக்கெடுப்பு

 ஏப்., 24ல் வரையாடு கணக்கெடுப்பு


ADDED : மார் 24, 2026 04:39 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 24, 2026 04:39 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: நடப்பு ஆண்டுக்கான ஒருங்கிணைந்த வரையாடுகள் கணக்கெடுப்பு, ஏப்., 24ல் துவங்க உள்ளது.

தமிழகத்தில் மாநில விலங்காக அறிவிக்கப்பட்டுள்ள வரையாடுகள் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வந்தது. இதை கருத்தில் வைத்து, 2023ல் வரையாடுகள் பாதுகாப்பு திட்டம் அறிவிக்கப்பட்டது.

இத்திட்டத்தின்படி, தமிழக, கேரள வனத் துறையினர் இணைந்து, ஒருங்கிணைந்த வரையாடு கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. இதில், 2025ம் ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில், 1,303 வரையாடுகள் இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இந்நிலையில், நடப்பு ஆண்டுக்கான வரையாடுகள் கணக்கெடுப்பு, ஏப்., 24 முதல், 27 வரை நடக்க உள்ளதாக, வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

தமிழகத்தில், 14 வன கோட்டங்களில், 177 பகுதிகளில், இந்த கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us