சட்டவிரோத பணப் பரிமாற்றம் : சென்னையில் 5 இடங்களில் அமலாக்கத்துறை ரெய்டு
சட்டவிரோத பணப் பரிமாற்றம் : சென்னையில் 5 இடங்களில் அமலாக்கத்துறை ரெய்டு
ADDED : செப் 10, 2025 08:47 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: சென்னையில் தொழிலதிபர் வீடு உள்பட 5 இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பான புகாரின் அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்பட்டு வருகிறது. சென்னை வேளச்சேரியில் தொழிலதிபர் பிஷ்னோய் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது.
அதேபோல அடையாறில் உள்ள டாக்டர் இந்திரா என்பவர் வீட்டில் அதிகாரிகள் சோதனை நடத்தினர். மேற்கு மாம்பலம் உள்பட மேலும் 2 பகுதிகளில் துணை ராணுவத்தினரின் பாதுகாப்போடு இந்த சோதனையானது நடத்தப்பட்டு வருகிறது.