தங்கம் விலை இன்று அதிரடியாக உயர்வு; ஒரு சவரன் ரூ.71,360க்கு விற்பனை
தங்கம் விலை இன்று அதிரடியாக உயர்வு; ஒரு சவரன் ரூ.71,360க்கு விற்பனை
ADDED : மே 30, 2025 09:42 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை இன்றும் அதிகரித்துள்ளது. ஒரு சவரன் ரூ.200 உயர்ந்து ரூ.71,360க்கு விற்பனையாகி வருகிறது.
சர்வதேச நிலவரங்களால் தங்கம் விலை ஏற்ற, இறக்கமாக காணப்பட்டு வருகிறது. தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ.320 குறைந்து ரூ.71,160க்கு விற்பனையானது.
இந்த நிலையில், தங்கம் விலை இன்று சற்று உயர்ந்துள்ளது. ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.200 அதிகரித்து ரூ.71,360க்கு விற்பனையாகி வருகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.25 உயர்ந்து ரூ.8,920க்கு விற்பனையாகி வருகிறது.
தொடர்ந்து ஏற்ற, இறக்கமாக காணப்பட்டு வந்தாலும், ஒரு மாதம் முடிந்த நிலையிலும், தங்கம் விலை இன்னும் ரூ.71 ஆயிரத்தை விட்டு குறையவில்லை. இது திருமணம் உள்ளிட்ட விஷேசங்களுக்கு நகை வாங்க விரும்புபவர்களுக்கு அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.