/
செய்திகள்
/
தமிழகம்
/
கடலோர பகுதிகளில் சட்ட விரோத கட்டடம் பசுமை தீர்ப்பாயம் அரசுக்கு கேள்வி கடலோர பகுதிகளில் சட்ட விரோத கட்டடம் பசுமை தீர்ப்பாயம் அரசுக்கு கேள்வி

ADDED : செப் 16, 2025 06:38 AM
சென்னை : சி.ஆர்.இசட்., எனும் கடலோர ஒழுங்குமுறை மண்டல பகுதிக்குள் கட்டப்பட்ட, சட்ட விரோத கட்டடங்களை அகற்ற எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து, அறிக்கை தாக்கல் செய்யுமாறு, தமிழக அரசுக்கு, தென் மண்டல பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
'சி.ஆர்.இசட்., பகுதிகளுக்குள் சட்டவிரோதமாக கட்டப்பட்ட அனைத்து கட்டடங்கள், சாலைகள் உள்ளிட்ட கட்டமைப்புகளை இடித்து, அதற்கு பொறுப்பானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, சென்னையை சேர்ந்த சரவணன் என்பவர் மனு தாக்கல் செய்தார்.
இதை விசாரித்த தீர்ப்பாய நீதிபதி புஷ்பா சத்யநாராயணா, நிபுணர் குழு உறுப்பினர் பிரசாந்த் கர்கவா ஆகியோர், 'மனுதாரர் குறிப்பிட்ட கட்டுமானங்கள் அனைத்தும், செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ளன. சி.ஆர்.இசட்., பகுதிக்குள் சட்ட விரோதமாக கட்டப்பட்ட கட்டடங்களை அகற்ற எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாக, தமிழக கடலோர மண்டல மேலாண்மை ஆணையம், நகர் ஊரமைப்பு துறை, செங்கல்பட்டு கலெக்டர் ஆகியோர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்' என உத்தரவிட்டு, விசாரணையை, வரும் நவம்பர், 13ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
சென்னை, செப். 16--
சி.ஆர்.இசட்., எனும் கடலோர ஒழுங்குமுறை மண்டல பகுதிக்குள் கட்டப்பட்ட, சட்ட விரோத கட்டடங்களை அகற்ற எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து, அறிக்கை தாக்கல் செய்யுமாறு, தமிழக அரசுக்கு, தென் மண்டல பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.