ADDED : ஜூன் 12, 2025 07:38 PM
புதுடில்லி:''டில்லியில் மத்திய அரசு திட்ட பயனாளிகள், 3.45 லட்சம் பேருக்கு சுகாதார அட்டைகள் வழங்கப்பட்டன,'' என, டில்லி அமைச்சர் பங்கஜ்குமார் சிங் கூறினார்.
மாநில சுகாதார அமைச்சர் பங்கஜ்குமார் சிங் கூறியதாவது:
வஜ் வந்தனா யோஜனா எனும் திட்டத்தின் கீழ், 1,66,841 அடையாள அட்டைகள், பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. முதியோர் நலன் தொடர்பான அந்த திட்டத்தின் கீழ், 1,24,215 அட்டைகள் சுயமாக பதிவு செய்த வகையிலும், 11,284 அட்டைகள் பி.ஐ.எஸ்., ஆப்பரேட்டர்கள் பாயிலாகவும், 42,176 அட்டைகள் பொதுச்சேவை மையங்கள் சார்பிலும் வழங்கப்பட்டுள்ளன.
முதியோருக்கு கண்ணியமான வாழ்க்கையை உறுதி செய்யும் வகையில், மத்திய அரசு பல திட்டங்களை செயல்படுத்துகிறது. அந்த வகையில் பிரதான் மந்திரி ஜன ஆரோக்கிய யோஜனா திட்டத்தின் கீழ் மருத்துவமனை சிகிச்சை பெற, கூடுதலாக, 85 மருத்துவமனைகள் இணைக்கப்பட்டுள்ளன.
இந்த மாதத்தில் மட்டும், 30 புதிய ஆயுஷ்மான் ஆரோக்கிய மந்திர்கள், டில்லி மாநில மக்களுக்காக துவக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.