ADDED : செப் 11, 2025 02:07 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுப்பி:கொல்லுார் மூகாம்பிகை கோவிலுக்கு, 8 கோடி ரூபாய் மதிப்பிலான வைர கிரீடங்கள், தங்க வாளை இசை அமைப்பாளர் இளையராஜா அன்பளிப்பாக வழங்கினார்.
பிரபல இசை அமைப்பாளரும், ராஜ்யசபா எம்.பி.,யுமான இளையராஜா, தன் மகன் கார்த்திக் ராஜாவுடன், உடுப்பியின் கொல்லுார் மூகாம்பிகை கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.
பின், கொல்லுார் மூகாம்பிகைக்கு இரண்டு வைர கிரீடங்கள், நெக்லஸ், வீரபத்ர சுவாமிக்கு தங்க வாளை அன்பளிப்பாக கொடுத்தார். 'இதன் மதிப்பு, 8 கோடி ரூபாய் வரை இருக்கும்' என, கோவில் வட்டாரங்கள் தெரிவித்தன.

