ADDED : ஜூலை 05, 2025 03:26 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தமிழக முதல்வர் ஸ்டாலின், 'ஓரணியில் தமிழ்நாடு' என்று கூறுகிறார். இதனால் யாருக்கு லாபம், யாருக்கு நஷ்டம் என்பதை தி.மு.க., கூட்டணியில் இருப்பவர்கள் சிந்தித்து பார்க்க வேண்டும். தி.மு.க., மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது என்ற எண்ணம் யாருக்கெல்லாம் இருக்கிறதோ, அவர்கள் அனைவரும் ஓரணியில் திரள வேண்டும். வருவதும், வராததும் அவரவர் விருப்பம்.
என்னை பொறுத்தவரை, முதல்வர் ஸ்டாலினாக இருந்தாலும், திருமாவளவனாக இருந்தாலும், செல்வப்பெருந்தகையாக இருந்தாலும், அனைவரிடமும் நட்புடன் பழகுகிறேன். சலசலப்பை ஏற்படுத்துவது என் வேலை இல்லை. ஆனால், கடமையிலிருந்து முதல்வர் தவறும்போது, ஒரு கட்சியின் தலைவராக செயல்படுவது என் கடமை.
- நாகேந்திரன்,
தலைவர், தமிழக பா.ஜ.,