தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/'பா.ஜ., விடமிருந்து இந்தியாவை மீட்போம்'

'பா.ஜ., விடமிருந்து இந்தியாவை மீட்போம்'

'பா.ஜ., விடமிருந்து இந்தியாவை மீட்போம்'


ADDED : மார் 15, 2024 10:04 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 15, 2024 10:04 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:'இந்தியாவின் பரந்துபட்ட பன்முக ஆன்மாவை மீட்க ஒன்றிணைய உறுதியேற்போம்' என, முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

அவரது அறிக்கை:

கடந்த 2014ம் ஆண்டு ஆட்சிக்கு வந்தது முதலே மத்திய பா.ஜ., அரசு, இந்தியாவின் மதச்சார்பின்மை தன்மையை சீர்குலைத்து, சகிப்பின்மையை வளர்த்து, முஸ்லிம் சமூகத்தவருக்கு எதிரான பாகுபாட்டை ஊக்குவித்து வருகிறது.

குடியுரிமை திருத்த சட்டம் போன்ற, இந்திய அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரான சட்டங்களை நடைமுறைப்படுத்துவதன் வாயிலாக, முஸ்லிம்கள் மீதான வெறுப்பை சட்டப்பூர்வமாக்க வழிவகுக்கிறது.

முஸ்லிம் வெறுப்பை எதிர்த்து போராடுவதற்கான பன்னாட்டு நாளில், பா.ஜ., ஆட்சியின் வகுப்புவாத பாசிசத்தை வேரறுத்து, அவர்களின் பிடியில் இருந்து இந்தியாவின் பரந்துபட்ட பன்முக ஆன்மாவை மீட்க ஒன்றிணைய உறுதியேற்போம்.

இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us