கோவில்களின் வரலாற்றை காப்பாற்றுவோம்; ஆகம விதிகளின் அடிப்படையில் வகைப்படுத்த இணையதள வசதி!
கோவில்களின் வரலாற்றை காப்பாற்றுவோம்; ஆகம விதிகளின் அடிப்படையில் வகைப்படுத்த இணையதள வசதி!
UPDATED : செப் 16, 2026 07:30 AM
ADDED : செப் 16, 2026 07:28 AM

சென்னை: தமிழகத்தில் உள்ள கோவில்களை, ஆகம விதிகளின் அடிப்படையில் வகைப்படுத்தும் வகையில், 'ஆலயம் காப்போம்' அமைப்பு சார்பில், இணையதள வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது.
இது தொடர்பாக, 'ஆலயம் காப்போம்' அமைப்பின் இயக்குனர் விஜய்நாராயணன் கூறியதாவது: நீதிமன்றம் கூறிய அளவுகோல்களை விட்டுவிட்டு, வேறு சில அளவுகோல்களை பயன்படுத்தி, 'ஒரு கால பூஜை' திட்டத்தில் உள்ள பெரும்பாலான கோவில்களை ஆகமமற்றவை என மாற்றியுள்ளனர். இது, நீதிமன்ற உத்தரவை மீறும் செயல்.
அறநிலையத் துறையின் வலைதளத்தில் ஆகமம் அல்லாத கோவில் குறித்த ஆட்சேபனையை பதிவு செய்யும் வழிமுறைகள் குறித்த காணொளி வெளியிட்டுள்ளோம். இதை https://agama.aalayamkaappom.org/ என்ற இணையதளத்தில் காணலாம்.
கோவில்களின் வரலாற்றை காப்பாற்ற, அனைவரும் அவசியம் விண்ணப்பிக்க வேண்டும். ஆட்சேபனை தெரிவிக்க வழங்கப்பட்ட, 30 நாள் கால அவகாசத்தை மேலும் நீட்டிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
