'டிலாய்ட்ஸ் குளோபல் லக்சுரி' தரவரிசையில் 'மலபார் கோல்டு அண்டு டைமண்ட்ஸ்'க்கு இடம்
'டிலாய்ட்ஸ் குளோபல் லக்சுரி' தரவரிசையில் 'மலபார் கோல்டு அண்டு டைமண்ட்ஸ்'க்கு இடம்
ADDED : பிப் 24, 2024 01:32 AM
சென்னை:முன்னணி நகை விற்பனை நிறுவனமான மலபார் கோல்டு அண்டு டைமண்ட்ஸ், 'டிலாய்ட்ஸ் குளோபல் பவர்ஸ் ஆப் லக்சுரி குட்ஸ் - 2023' தர வரிசையில், 19வது இடத்தை பிடித்துள்ளது. நாட்டின் ஆடம்பர பொருட்களுக்கான சந்தையில், இந்த பிராண்ட் இந்தியாவில் முதலிடத்தை பெற்றுள்ளது.
நகைகள், ஆடைகள், கைக்கடிகாரங்கள் மற்றும் அழகுசாதன பொருட்களின் உலகளாவிய விற்பனை மற்றும் பிராண்ட் மதிப்பை மதிப்பிடுவதன் வாயிலாக, டிலாய்ட்ஸ் குளோபல் பவர்ஸ் ஆப் லக்சுரி குட்ஸ் தர வரிசை பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.
உலகளாவிய விற்பனை மற்றும் பிராண்ட் மதிப்பில், மலபார் கோல்டு அண்டு டைமண்ட்சின் சிறப்பான செயல்திறனே, இந்த சிறப்புமிக்க பட்டியலில் இடம்பிடிக்க செய்துள்ளது.
மலபார் குழும தலைவரான எம்.பி.அகமத் பேசுகையில், ''உலக ளாவிய அளவில் டிலாய்டினால் அங்கீகரிக்கப்படுவது எங்களுக்கு பெருமையாக உள்ளது. தரம், வெளிப்படைத் தன்மை மற்றும் வாடிக்கையாளர் திருப்தி ஆகியவற்றில், எங்களின் அசைக்க முடியாத அர்ப்பணிப்புக்கு, இந்த சாதனை ஒரு சான்று.
இந்த தொழில்துறையில், எல்லைகளை விரிவுபடுத்தி, புதிய அத்தியாயங்களை ஏற்படுத்துவதில், நாங்கள் உறுதியாக இருக்கிறோம்,'' என்றார்.