ADDED : ஜூன் 16, 2025 05:34 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராஜபாளையம்:விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் வடக்கு மலையடிபட்டியில் மைக்செட் தொழிலாளி வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதில் ஈடுபட்டவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
ராஜபாளையம் வடக்கு மலையடிப்பட்டி காமராஜபுரம் பகுதியைச் சேர்ந்த முத்துச்சாமி மகன் முருகேசன் (எ) சோலை ராஜ் 33, தந்தையும் மகனும் மைக் செட் வேலை செய்து வருகின்றனர்.
நேற்றிரவு 7:00 மணிக்கு மலையடிப்பட்டி ரயில்வே கேட் அருகே மயான சாலையில் நின்ற சோலைராஜ் மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டார். போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

