UPDATED : ஜூன் 19, 2025 06:30 PM
ADDED : ஜூன் 19, 2025 12:30 PM

திருச்சி: திருச்சி முக்கொம்பு அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் முசிறி வருவாய் கோட்டாட்சியர் ஆராவமுத தேவசேனா உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி- குளித்தலை சாலையில் முக்கொம்பு அருகே கரூர் நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பஸ்ஸூம், அவரது ஜூப்பும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில், பலத்த காயமடைந்த முசிறி வருவாய் கோட்டாட்சியர் (ஆர்.டி.ஓ.,) ஆராவமுத தேவசேனா சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார். அவரது ஜீப் டிரைவர் பலத்த காயமடைந்தார்.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், காயமடைந்த டிரைவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், உயிரிழந்த ஆர்.டி.ஓ., ஆராவமுத தேவசேனா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.