ராஜ்யசபா தேர்தல் குறித்து நயினார் நாகேந்திரன் 'பளீச்'
ராஜ்யசபா தேர்தல் குறித்து நயினார் நாகேந்திரன் 'பளீச்'
ADDED : மே 26, 2025 03:28 PM

சென்னை: 'ராஜ்யசபா தேர்தலில் அ.தி.மு.க.,விடம் சீட் கேட்பது குறித்து தேசிய தலைமை தான் முடிவெடுக்கும்' என தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
தமிழகத்தில் காலியாகும் 6 ராஜ்யசபா இடங்களுக்கான தேர்தல் வரும் ஜூன் 19ம் தேதி நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இது குறித்து நிருபர்கள் கேள்விக்கு நயினார் நாகேந்திரன் அளித்த பதில்:
எங்களிடம் நான்கு சட்டசபை உறுப்பினர்கள் உள்ளனர். ராஜ்யசபா தேர்தலில் அதிமுகவிடம் சீட் கேட்பது குறித்து தேசிய தலைமை தான் முடிவெடுக்கும், என்றார்.
பா.ஜ., சார்பில் நடந்த ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பான கருத்தரங்கில் ஆந்திரா துணை முதல்வர் பவன் கல்யாண் பங்கேற்றது குறித்து நிருபர்கள் கேள்விக்கு, 'ஜூன் 22ம் தேதி திருப்பரங்குன்றத்தில் நடக்கும் முருக பக்தர் மாநாட்டில் பவன் கல்யாண் கலந்து கொள்கிறார். தமிழக தேர்தல் பிரசாரத்திற்கும் அவர் வருவார்' என நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.