முல்லைப் பெரியாறில் புதிய அணை:முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் கண்டனம்
முல்லைப் பெரியாறில் புதிய அணை:முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் கண்டனம்
ADDED : ஜன 27, 2024 02:29 AM
முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்டுவதே, கரையோரப் பகுதியில் வசிக்கும் மக்களின் பாதுகாப்பிற்கு ஒரே தீர்வு என, கவர்னர் உரையில் கேரள அரசு அறிவித்திருப்பது, கடும் கண்டனத்துக்கு உரியது.
இந்த அறிவிப்பு, தமிழகத்தின் உரிமைக்கு எதிரான, சட்டத்திற்கு புறம்பான செயல். மாநில சுயாட்சி, மாநில உரிமை என அடிக்கடி குரல் எழுப்பும் முதல்வர், தோழமை கட்சி ஆளும் மாநிலங்கள், தமிழகத்திற்கு எதிராக செயல்படும்போது, அதை தட்டிக் கேட்காமல் மவுனமாக இருப்பது வியப்பாக உள்ளது.
* அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன்: தென் மாவட்ட மக்களை வஞ்சிக்கும், கேரள அரசின் முயற்சியை, ஆரம்ப நிலையிலேயே தடுத்து நிறுத்த வேண்டும்.
உச்ச நீதிமன்றம் அமைத்த கண்காணிப்பு மற்றும் நிபுணர் குழு, பல முறை மேற்கொண்ட ஆய்வில், முல்லைப் பெரியாறு பாதுகாப்பாக இருப்பதை உறுதிப்படுத்திய பின்னரும், புதிய அணையை கட்டியே தீருவோம் என்ற கேரள அரசின் பிடிவாதப் போக்கை, ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.

