ADDED : ஜன 10, 2024 01:21 AM
சென்னை:''தென்மாவட்ட மக்களின் குரல் லோக்சபாவில் ஒலிக்க வேண்டும். யாருடன் கூட்டணி என்பது விரைவில் நல்ல முடிவு எடுப்போம்,'' என, புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி கூறினார்.
சென்னையில், அவரது பேட்டி:
போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கைகள் முழுக்க, முழுக்க, நியாயமானது. தொழிலாளர்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட தொகையில், 1.50 லட்சம் கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளதாக கூறுகின்றனர்.
தொழிலாளர்களிடம் பிடிக்கப்பட்ட பணம் எங்கு சென்றது என்பது குறித்து, போக்குவரத்து துறை அமைச்சர், பொதுமக்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டும். இதுகுறித்து, சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். தொழிலாளர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்.
தென் மாவட்ட மக்கள் குரல் லோக்சபாவில் ஒலிக்க வேண்டும். யாருடன் கூட்டணி என்பது குறித்து, விரைவில் நல்ல முடிவு எடுப்போம்.
இவ்வாறு கிருஷ்ணசாமி கூறினார்.

