கோரிக்கைகளை ஆதரிக்கும் கட்சிகளுக்கு ஆதரவு வணிகர் சங்கம் அறிவிப்பு
கோரிக்கைகளை ஆதரிக்கும் கட்சிகளுக்கு ஆதரவு வணிகர் சங்கம் அறிவிப்பு
ADDED : பிப் 06, 2024 03:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பழநி: ''வணிகர்களின் கோரிக்கைகளை ஆதரிக்கும் கட்சிகளுக்கு லோக்சபா தேர்தலில் ஆதரவு என்ற நிலைப்பாட்டை எடுக்க ஆலோசனை நடத்துகிறோம்,'' என, திண்டுக்கல் மாவட்டம் பழநியில் வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில தலைவர் விக்கிரமராஜா குறிப்பிட்டார்.
வணிகர் சங்க ஆண்டு விழாவில் பங்கேற்ற அவர் பேசியதாவது: வணிகர்களுக்கு ஆதரவாக பேரமைப்பு எப்போதும் செயல்படும். சென்னை கோயம்பேடு பகுதியில் லூலூ மார்ட் அமையுள்ளதாக வதந்தி பரவி வருகிறது. அதனை மீறி லூலூ மார்ட் அமைந்தால் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு போராட்டத்தை அறிவிக்கும். தமிழக அரசின் வாட் வரி சமாதான திட்டம் வணிகர்களுக்கு ஒளியேற்றி வைத்தது. ஆனால் கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு ஆதரவாக சட்டங்கள் உள்ளன. இதனை எதிர்த்து மத்திய அரசிடம் வலியுறுத்துவோம் என்றார்.