ADDED : செப் 13, 2025 01:46 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தஞ்சாவூர்:தஞ்சாவூர் அருகே நடுவூரில் அரசு கால்நடை பண்ணை மற்றும் ஆராய்ச்சி நிலையத்தை அழித்து சிப்காட் தொழில் மையமாக மாற்றும் முடிவை கைவிட வலியுறுத்தி, தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொதுச்செயலர் பாண்டியன், நேற்று கலெக்டர் பிரியங்கா பங்கஜத்திடம் மனு அளித்தார்.
பின் கலெக்டர் அலுவலக வளாகத்தில், விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பாண்டியன் கூறுகையில், ''தி.மு.க., அரசு வேளாண் மற்றும் கால்நடை பல்கலைக்கு சொந்தமான ஆராய்ச்சி நிலையம் மற்றும் பண்ணைகளை அழிக்க நினைப்பது கண்டிக்கத்தக்கது.
தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாட்டில் அரசு கால்நடை கல்லுாரிக்கு சொந்தமாக நடுவூரில் 1,700 ஏக்கர் நிலத்தில், 500 ஏக்கரில் அரசு சிப்காட் அமைக்க முயற்சிக்கிறது. முதல்வர் நடுவூரில் சிப்காட் அமைக்கும் முடிவை கைவிட வேண்டும்,'' என்றார்.

