10 ஆண்டுகளில் ரயில் 'ஏசி' பெட்டிகளில் பயணிப்போர் 165 சதவீதம் அதிகரிப்பு
10 ஆண்டுகளில் ரயில் 'ஏசி' பெட்டிகளில் பயணிப்போர் 165 சதவீதம் அதிகரிப்பு
UPDATED : செப் 16, 2025 10:40 AM
ADDED : செப் 16, 2025 07:20 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: நாடு முழுதும், ரயில்களில் தினமும் 2.50 கோடி பேர் பயணம் செய்து வருகின்றனர். நாட்டில் பல்வேறு மாநிலங்களில் நகரமயமாக்கல் அதிகரித்து வருகிறது.
விரைவு ரயில்களில், 'ஏசி' பெட்டிகளில் தினசரி பயணிப்போர் எண்ணிக்கை, 2014ல் 3,27,129 ஆக இருந்தது. தற்போது, 2024 ஏப்., நிலவரப்படி 8,68,592 ஆக அதிகரித்து உள்ளது.
இதன்படி, நாடு முழுதும் ரயில்களில், 'ஏசி' பெட்டிகளில் பயணிப்போர் எண்ணிக்கை, 10 ஆண்டுகளில் 165 சதவீதம் அதிகரித்துள்ளது என, ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.