ADDED : ஜூன் 01, 2025 06:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரசு போக்குவரத்துக் கழக பஸ்களில், கூலி வேலை செய்பவர்கள் உள்ளிட்ட ஏழை, எளிய மக்கள்தான் பயணம் செய்கின்றனர். வீட்டு வாடகை உயர்வு, மின்கட்டண உயர்வு, அத்தியாவசியப் பொருட்கள் விலை உயர்வால், ஏழைகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், பஸ் கட்டணத்தை உயர்த்த, தி.மு.க., அரசு முடிவுஎடுத்து இருப்பது, எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல் உள்ளது. தமிழக அரசால் இயக்கப்படும் பஸ்களின் நிலை, மிக மோசமாக உள்ளது. இதை சரி செய்யாமல், கட்டணத்தை உயர்த்துவதை ஏற்க முடியாது. பஸ் கட்டண உயர்வு முடிவை உடனடியாக கைவிட வேண்டும்.
பன்னீர்செல்வம், முன்னாள் முதல்வர்