ADDED : ஜூன் 01, 2025 05:33 AM
சென்னை: மின் உபகரணங்களை விற்பனை செய்யும், 'ரிலையன்ஸ் டிஜிட்டல்' நிறுவனம், 'பூட் அப் இந்தியா' என்ற மடிக்கணினி விற்பனை சலுகை திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த அற்புத சலுகை, ஆகஸ்ட், 31 வரை வழங்கப்படுகிறது.
இது, வெறும் விற்பனை மட்டுமல்ல; நாட்டின் அடுத்த தலைமுறை மாணவர்கள், இளைஞர்களுக்கு டிஜிட்டல் கருவிகளை வழங்கி, அவர்களின் வெற்றிக்கான வழியை உருவாக்கும் முயற்சியாகும்.
இந்த சலுகை திட்டத்தின் கீழ் மடிக்கணினி வாங்குபவர்களுக்கு, 1 கோடி ரூபாய் மதிப்பிலான ஊக்கத்தொகை, 25 கார்கள், 40 பைக்குகள், 450க்கும் அதிகமான மின் உபகரணங்கள் பரிசாக வழங்கப்படுகின்றன.
மேலும், ஒவ்வொரு வாடிக்கையாளர்களுக்கும் உறுதியாக பரிசு வழங்கப்படும். ரிலையன்ஸ் டிஜிட்டல், மை ஜியோ விற்பனை மையங்கள் மற்றும் ரிலையன்ஸ் டிஜிட்டல் இணையதளம் வழியாக, மடிக்கணினிகளை வாங்கி பரிசுகளை பெறலாம்.