பழனிசாமிக்கு 'இசட் பிளஸ்' பாதுகாப்பு வழங்க கோரிக்கை
பழனிசாமிக்கு 'இசட் பிளஸ்' பாதுகாப்பு வழங்க கோரிக்கை
ADDED : மே 27, 2025 05:27 AM

மதுரை: “அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமிக்கு, 'ஒய் பிளஸ்' பிரிவு பாதுகாப்பு உள்ள நிலையில் தொடர் மிரட்டலால், 'இசட் பிளஸ்' பிரிவு பாதுகாப்பு அளிக்க வேண்டும்,” என, சட்டசபை எதிர்க்கட்சி துணைத்தலைவர் உதயகுமார் தெரிவித்தார்.
மதுரையில், அவர் நேற்று அளித்த பேட்டி:
பழனிசாமியின் சேலம் வீட்டிற்கு, வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இது முதல்முறை அல்ல. மிரட்டல் கடிதங்கள் தொடர்ந்து வருகின்றன.
இது தொடர்பாக, போலீசாருக்கு உரிய வகையில் தகவல் தெரிவித்தும், அது தொடர்பான தீவிர விசாரணை மேற்கொண்டதாக தெரியவில்லை.
இதனால், பழனிசாமிக்கு வந்திருக்கும் மிரட்டல் விஷயத்தில் தி.மு.க., அரசு தொடர்ந்து வேடிக்கை பார்க்கிறதோ என்ற கவலை ஏற்பட்டிருக்கிறது.
பழனிசாமியின் பாதுகாப்பு குறித்து மத்திய, மாநில அரசுகள உடனடியாக அக்கறை செலுத்த வேண்டும்.
எந்த மிரட்டலுக்கும் அஞ்சுபவர் அல்ல பழனிசாமி. அவருக்கு, ஒய் பிளஸ் பிரிவு பாதுகாப்பு ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள நிலையில், இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்க மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும். இது தமிழக மக்களின் கோரிக்கை.
இவ்வாறு அவர் கூறினார்.