sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ஆட்சி அதிகாரத்தை விட தன்மானம் முக்கியம்: இபிஎஸ் பேச்சு

/

ஆட்சி அதிகாரத்தை விட தன்மானம் முக்கியம்: இபிஎஸ் பேச்சு

ஆட்சி அதிகாரத்தை விட தன்மானம் முக்கியம்: இபிஎஸ் பேச்சு

ஆட்சி அதிகாரத்தை விட தன்மானம் முக்கியம்: இபிஎஸ் பேச்சு


UPDATED : செப் 15, 2025 10:27 PM

ADDED : செப் 15, 2025 09:46 PM

Google News

UPDATED : செப் 15, 2025 10:27 PM ADDED : செப் 15, 2025 09:46 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: '' ஆட்சி அதிகாரத்தில் இருப்பதை விட தன்மானம் தான் முக்கியம். அதில் ஒரு இம்மியளவு கூட விட்டுக் கொடுக்க மாட்டேன், '' என அதிமுக பொதுச்செயலர் இபிஎஸ் பேசினார்.

சென்னை தி.நகரில் நடந்த அதிமுக பொதுக்கூட்டத்தில் இபிஎஸ் பேசியதாவது: அதிமுகவுக்கு துரோகம் செய்பவர்கள் நடுரோட்டில் நிற்பார்கள். விலாசம் இல்லாமல் போய் விடுவார்கள். உயிரோட்டமுள்ள கட்சி. இது இறைவனால் உருவாக்கப்பட்ட கட்சி. ஏழைகளுக்காக தோற்றுவிக்கப்பட்ட கட்சி. குடும்பத்துக்காக உருவாக்கப்பட்டது அல்ல. யார் வேண்டுமானாலும் உயர்ந்த பதவிக்கு வர முடியும். கட்சிக்கு துரோகம் செய்பவர்கள் யாராக இருந்தாலும், கடவுள் மன்னிக்க மாட்டார்.

அதிமுகவை எவராலும் ஒண்ணும் பண்ண முடியாது. ஆட்சி அதிகாரத்தில் இருப்பதை விட தன்மானம் தான் எங்களுக்கு முக்கியம். அதில் ஒரு இம்மியளவு கூட விட்டுக் கொடுக்க மாட்டேன். சிலரை கைகூலிகளாக வைத்துக் கொண்டு ஆட்டம் போடுகிறீர்கள். அவர்களை அடையாளம் காட்டிவிட்டோம். அதற்கு விரைவில் முடிவு கட்டுவோம்.

சில பேர் அதிமுக ஆட்சியை கவிழ்க்க எதிர்த்து ஓட்டுப் போட்டார்கள். அவர்களை மன்னித்து அரவணைத்து துணை முதல்வர் பதவியை கொடுத்தோம். அவர்கள் திருந்தவில்லை. அதிமுகவின் கோவிலாக இருக்கும், கட்சி தலைமையகத்தை அடித்து நொறுக்கியவர்களை கட்சியில் சேர்க்க வேண்டுமா?.

இன்னொருவர், அதிமுக ஆட்சியை கவிழ்ப்பதற்கு 18 எம்எல்ஏக்களை கடத்தி சென்றார். அவர்களையும் கட்சியில் சேர்க்க வேண்டுமா? அவர்களை யார் ஏற்றுக் கொள்வது.எனக்கு உறுதியான எண்ணம் உண்டு. உறுதியான மனநிலை உண்டு. எதற்கும் அஞ்சாத ஆற்றல் உண்டு. யாரும் என்னை மிரட்டி பார்க்க முடியாது.

இதுவரை, அதிமுக ஆட்சி செய்யும் போதும் சரி, இப்போதும் சரி, மத்தியில் யாரும் எந்த அச்சுறுத்தலும் கொடுக்கவில்லை. நன்மை தான் செய்தனர். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, சில பேர் கட்சியை கபளீகரம் செய்ய பார்த்தனர். ஆட்சியை கவிழ்க்க பார்த்தனர். மத்தியில் இருந்தவர்கள் காப்பாற்றினர். இவ்வாறு அவர் பேசினார்.






      Dinamalar
      Follow us