11ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் வன்கொடுமை: சிறுவர்கள் உட்பட 3 பேர் கைது!
11ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் வன்கொடுமை: சிறுவர்கள் உட்பட 3 பேர் கைது!
ADDED : ஜூன் 11, 2025 01:23 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே 11ம் வகுப்பு மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த 2 சிறுவர்கள் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
காஞ்சிபுரம் அரசு பள்ளியில், 16 வயது மாணவி 11ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த மாணவிக்கு 2 சிறுவர்கள் உட்பட 3 பேர் குளிர்பானத்தில் மதுபானத்தை கலந்து கொடுத்து தனியாக அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
இது தொடர்பாக புகார்படி, 2 சிறுவர்கள் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. பள்ளி சிறுவர்களே இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்டது பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.