தொழில் வளர்ச்சியில் பின்தங்கிய தமிழகம்: அமைச்சர் பேச்சால் சர்ச்சை
தொழில் வளர்ச்சியில் பின்தங்கிய தமிழகம்: அமைச்சர் பேச்சால் சர்ச்சை
ADDED : ஜூன் 19, 2025 01:34 AM
மதுரை: தென்மாநிலங்களுடன் ஒப்பிடும் போது தமிழகம் தொழில் வளர்ச்சியில் பின்தங்கியுள்ளதாக இந்திய தொழில் கூட்டமைப்பு சார்பில் மதுரையில் 'சி.ஐ.ஐ., மதுரை 2035 பார்வை' என்ற தலைப்பில் நடந்த கருத்தரங்கில் அமைச்சர் தியாகராஜன் பேசினர்.
நிகழ்ச்சியில் அமைச்சர் பேசியதாவது:
ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானாவுடன் ஒப்பிடும்போது தமிழகம் கல்வி, சமூகநீதி, சமத்துவம் முன்னிலையில் உள்ளது. ஆனால் தொழில் துறையில் பின்தங்கியுள்ளது.
இந்தியாவில் மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது தமிழகத்தில் நகரமயமாதல் கொள்கையிலும் பின்தங்கியுள்ளது.
அ.தி.மு.க., ஆட்சியின் போது துவங்கப்பட்ட 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தின் கீழ் வந்த நிறைய திட்டங்கள் தவறாக உள்ளன.
அதனால் மதுரையில் பெரியார் பஸ் ஸ்டாண்ட் கட்டடம், எல்காட் பூங்கா கட்டடங்களை திறப்பதற்கு சுற்றுச்சூழல் அனுமதி இதுவரை வாங்கப்படவில்லை.
மாநில அளவில் அரசிடம் நிறைய திட்டங்கள் இருந்தாலும் செயல்படுத்தும் வேகம் குறைவாக உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
'என்னுடைய பேச்சு தவறாக புரிந்துகொள்ளப்பட்டு, சர்ச்சையாக்கப்பட்டு வருகிறது' என, அமைச்சர் தியாகராஜன் தற்போது விளக்கம் அளித்துள்ளார்.

