ADDED : மே 22, 2025 05:43 AM

பயங்கரவாதத்தால் இந்தியா தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகிறது. பஹல்காமில் நடந்த மோசமான பயங்கரவாத தாக்குதலில், 26 அப்பாவிகள் உயிர் இழந்துள்ளனர். அதற்கு, இந்தியா சார்பில் பயங்கரவாதத்தை ஆதரிக்கும் பாகிஸ்தானுக்கு ராணுவ பதிலடி கொடுக்கப்பட்டு இருக்கிறது.
இதன் தொடர்ச்சியாக, பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் குரலை பல நாடுகளுக்கும் எடுத்து செல்வதற்காக, எம்.பி.,க்கள் அடங்கிய குழு ஏற்படுத்தப்பட்டு, அக்குழு ரஷ்யா, ஸ்பெயின், கிரீஷ், லத்தீவ்யா, ஸ்லோவீனியா உள்ளிட்ட நாடுகளுக்கு செல்கிறது. அங்கு பயங்கரவாதத்தை எதிர்த்து ஒழிப்பதில் நம் நாட்டின் நிலைப்பாட்டை எடுத்துச் சொல்வோம்.
இந்தியா குறித்த பொய்யான கருத்துகளை பரப்ப துவங்கி இருக்கும் பாகிஸ்தானின் முயற்சியை முறியடிப்பதே குழுவின் பிரதான நோக்கம். இந்திய மக்கள் பிரதிநிதிகளாக இக்குழு பல்வேறு நாடுகளுக்கும் செல்கிறது.
- கனிமொழி, தி.மு.க., - எம்.பி.,