ADDED : ஜன 16, 2024 11:34 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்புத்தூர் : 'தமிழகத்தில் பா.ஜ.,வை தடுக்கும் சக்தி தி.மு.க.,' என அமைச்சர் பெரியகருப்பன் பேசினார்.
திருப்புத்துாரில் தி.மு.க., சார்பில் நடந்த கட்சி கொடியேற்று விழாவில் அவர் பேசியதாவது: தி.மு.க., ஒரு அரசியல் இயக்கம் மட்டும் அல்ல. சமுதாய சீர்திருத்த இயக்கம். மத்தியில் பா.ஜ., மதச்சார்பற்ற நாடு என்பதை மறந்து, ஒரே நாடு, மதம், மொழி என்ற ஒற்றை குறிக்கோளோடு அரசை வழி நடத்துகிறது. அத்தகைய சக்தியை தமிழகத்தில் தடுத்து நிறுத்துகின்ற சக்தி தான் தி.மு.க., என்றார்.

