ADDED : செப் 30, 2025 07:20 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை : கரூரில் நடிகர் விஜய் பிரசார கூட்டத்தில், நெரிசலில் சிக்கி, 41 பேர் உயிரிழந்தனர். இதுதொடர்பாக, பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் வதந்தி பரப்பியதாக, சென்னையில், 25 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து உள்ளனர்.
அதில், பெரும்பாக்கத்தைச் சேர்ந்த பா.ஜ.,வின் கலை, கலாசார பிரிவு செயலர் சகாயம், 38, மாங்காடைச் சேர்ந்த த.வெ.க., உறுப்பினர் சிவநேசன், 36, ஆவடியைச் சேர்ந்த, 46வது வட்ட செயலர் சரத்குமார், 32, ஆகிய மூன்று பேரை, சைபர் கிரைம் போலீசார் நேற்று கைது செய்தனர்.

