இ.எப்.டி.ஏ., ஒப்பந்தம் அமல் வர்த்தகர்கள் மகிழ்ச்சி
இ.எப்.டி.ஏ., ஒப்பந்தம் அமல் வர்த்தகர்கள் மகிழ்ச்சி
ADDED : அக் 02, 2025 12:14 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர் : இ.எப்.டி.ஏ., - யுரோப்பியன் பிரீ டிரேடு அசோசியேஷன் இடையே, 2024 மார்ச் 10ல், பொருளாதார வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்த ஒப்பந்தப்படி, இ.எப்.டி.ஏ., நாடுகள், இந்தியாவில், 8.80 லட்சம் கோடி ரூபாய் மதிப்பில் முதலீடு செய்வதாக உறுதி அளித்துள்ளன. ஒப்பந்தம் நேற்று முதல் அமலுக்கு வந்தது குறித்து ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் - ஏ.இ.பி.சி., துணைத்தலைவர் சக்திவேல்
கூறியதாவது:ஐஸ்லாந்து, லீக்கின்ஸ்டைன், நார்வே, சுவிட்சர்லாந்து ஆகிய நான்கு நாடுகளுக்கான இந்திய ஆயத்த ஆடை ஏற்றுமதி அதிகரிப்பதோடு, கூடுதல் வேலைவாய்ப்புகள் உருவாகவும், நீண்டகால தொழில் துறை வளர்ச்சிக்கும் இந்த ஒப்பந்தம் கைகொடுக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.

