sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

உதயநிதி சந்தோஷத்திற்காக கார் பந்தயமா? நடத்தக்கூடாது என அ.தி.மு.க., கடிதம்

/

உதயநிதி சந்தோஷத்திற்காக கார் பந்தயமா? நடத்தக்கூடாது என அ.தி.மு.க., கடிதம்

உதயநிதி சந்தோஷத்திற்காக கார் பந்தயமா? நடத்தக்கூடாது என அ.தி.மு.க., கடிதம்

உதயநிதி சந்தோஷத்திற்காக கார் பந்தயமா? நடத்தக்கூடாது என அ.தி.மு.க., கடிதம்

23


ADDED : ஜூலை 31, 2024 07:28 AM

Google News

ADDED : ஜூலை 31, 2024 07:28 AM

23


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை : “தமிழக அமைச்சர் உதயநிதியின் சந்தோஷத்திற்காக, 'பார்முலா - 4 கார் ரேஸ்' நடத்தப்படுகிறது. இவ்விவகாரத்தில், பொதுமக்கள் நலன் கருதி, அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என அ.தி.மு.க., வழக்கறிஞர் அணி செயலர் இன்பதுரை தெரிவித்தார்

அவர் அளித்த பேட்டி:

தமிழக அரசும், ரேஸிங் புரமோஷன் நிறுவனமும் இணைந்து இந்த ஆண்டின் துவக்கத்தில், சென்னை தெருக்களை சுற்றி பார்முலா கார் பந்தயம் நடத்த திட்டமிட்டிருந்தன. ஆனால், 'மிக்ஜாம்' புயல் வந்ததைத் தொடர்ந்து, பந்தயம் ஒத்தி வைக்கப்பட்டது. மீண்டும் அதை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதற்காக நாளும் குறித்துள்ளனர்.

ஏற்கனவே சென்னை தெருக்கள் நெருக்கடியான சூழலில் உள்ளன. அந்த நெருக்கடியில் இருந்து மக்களை மீட்டெடுக்க இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால், சென்னையின் நெருக்கடியான சாலைகள் வழியே, கார் பந்தயம் நடத்த திட்டமிட்டுள்ளனர்.

வெள்ளம் மற்றும் புயலால் பாதிக்கப்பட்ட நிலையிலும், கார் பந்தயம் நிகழ்ச்சியை நடத்த அரசு விரும்புகிறது. இது ரோம் நகரம் பற்றி எரியும்போது, நீரோ மன்னன் பிடில் வாசித்த நிகழ்வுபோல் உள்ளது.

சென்னையில், பார்முலா கார் பந்தயத்தை நடத்தினால், தேவையற்ற பிரச்னைகள் ஏற்படும். ஏனெனில் பந்தயம் நடக்கும்போது, பல பெரிய சாலைகள் மூடப்பட வேண்டும். போக்குவரத்து நிறுத்தப்பட வேண்டும். பந்தயம் நடக்க உள்ள பகுதியில், ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனை, பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை, சென்ட்ரல் ரயில் நிலையம் உள்ளிட்ட அதிமுக்கியமான இடங்கள் உள்ளன.

இந்தப் பகுதியில் எப்போதும் போக்குவரத்து நெரிசல் இருப்பதோடு, எந்நேரமும் மக்கள் சென்று வருவர். பந்தயத்தில் பங்கேற்கும் கார்கள் செல்லும்போது, 120 டெசிபல் அளவிற்கு மேல் சத்தம் கேட்கும். இது, அந்தப் பகுதியில் இருக்கும் மருத்துவமனை நோயாளிகளுக்கு சிரமத்தை ஏற்படுத்தும்.

Image 1301426
கார் பந்தயம் நடத்துவதற்கென்றே, சென்னையின் புறநகரான இருங்காட்டுக்கோட்டையில் சிறப்பான ஏற்பாடுகளுடன் நிரந்தர கட்டமைப்பு உள்ளது. அங்கு கார் பந்தயம் நடத்தினால், மக்கள் மத்தியில் அதீத முக்கியத்துவமும், நிகழ்ச்சிக்கு தன்னிச்சையான பிரபலமும் கிடைக்காமல் போகும் என்பதால், சென்னையின் முக்கியமான பகுதியில் கார் பந்தயம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

சென்னையின் மத்திய பகுதியில் கார் பந்தயம் நடத்தினால் கட்டாயம் பொது சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட வாய்ப்புள்ளது. பொது மக்கள் உயிருக்கும் ஆபத்து ஏற்படலாம்.

'ரேஸிங் புரோமோஷன்ஸ் பிரைவேட் லிமிடெட்' என்ற தனியார் நிறுவனம் வாயிலாக கார் பந்தயம் நடத்த அரசு அனுமதித்துள்ளது. அதற்காக, அரசு பணத்தை எடுத்து 42 கோடி ரூபாய் செலவிட்டுள்ளனர். அதை திரும்பப் பெற வேண்டும் என்று கூறி, ஏற்கனவே சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குப் போட்டு உரிய தீர்ப்பைப் பெற்றுள்ளோம். உயர் நீதிமன்றம் கார் பந்தயம் நடத்த பல நிபந்தனைகள் விதித்தது. ஆனால், தனியார் நிறுவனத்தை உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய வைத்தனர். வழக்கு நிலுவையில் இருக்கிறது. இருந்தபோதும், மீண்டும் கார் பந்தயம் நடத்த திட்டமிட்டுள்ளனர்.

தமிழகத்தில் தற்போது கொலைகள் தொடர்ச்சியாக நடந்து வருகின்றன. இது தொடர்பாக நடவடிக்கை எடுத்து, பொதுமக்களை தொடர் அச்சத்தில் இருந்து காப்பதை விடுத்து, கார் பந்தயம் நடத்துவதில் தமிழக அரசு கவனம் செலுத்துவது ஏற்புடையதல்ல.

போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாமல் கார் பந்தயம் நடத்தி உயிரிழப்பு ஏதும் ஏற்பட்டால், அது அரசு செய்த கொலையாகவே கருதப்படும்.

எனவே, பொதுமக்கள் நலன் கருதி, அரசு தரப்பில் கவுரவம் பார்க்காமல் சென்னையின் பிரதான பகுதியில் கார் பந்தயம் நடத்துவதை தவிர்க்க வேண்டும். அரசு பணம் வீணாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அமைச்சர் உதயநிதியின் தனிப்பட்ட சந்தோஷத்திற்காக கார் பந்தயம் நடத்தப்படுகிறது.

அதனால் தான், கார் பந்தயத்தை சென்னையின் பிரதான பகுதியில் நடத்தக் கூடாது என, தலைமைச் செயலரிடம் கடிதம் கொடுத்திருக்கிறோம். உரிய நடவடிக்கை இல்லாவிட்டால், மீண்டும் நீதிமன்ற உதவியை நாடுவோம். இவ்வாறு, அவர் கூறினார்.

விளம்பரதாரருக்கு நெருக்கடியா?

“கடந்த முறை மழை வெள்ளத்தால் கைவிடப்பட்ட, 'பார்முலா - 4' கார் ரேஸ் பந்தயம், ஆக., 30ல் நடத்தப்பட உள்ளது. இந்த முறை அரசின் சார்பில், எந்த செலவும் செய்யவில்லை. இதற்கான நிதி, விளம்பரதாரர்களிடம் இருந்து கிடைத்துள்ளது. ஆனால், எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி, பார்முலா - 4 கார் ரேஸ் போட்டி நடத்த, விளம்பரதாரர்களை வற்புறுத்துவதாக கூறி உள்ளார்.
அப்படி, நாங்கள் யாரையாவது வற்புறுத்தினோம் என, ஒருவரின் பெயரையாவது அவரால் சொல்ல முடியுமா; விளம்பரதாரரை எப்படி வற்புறுத்த முடியும்?
- உதயநிதி, விளையாட்டு துறை அமைச்சர்



கட்டாய வசூல்!

தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம், 'எப் - 4' மோட்டார் பந்தய நிகழ்ச்சிக்காக, சென்னை மற்றும் மேற்கு கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த பெரும்பாலான தொழில் முனைவோர்களிடம் நிதி வசூலிக்க வேண்டும் என்ற பணி, சில மாதங்களுக்கு முன் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.நிதி வழங்கவில்லை எனில், சிக்கலை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று, கட்டாயப்படுத்தி வருகின்றனர்.
பந்தய நிகழ்ச்சி, அமைச்சர் உதயநிதியின் கனவு திட்டம். கடந்த ஆண்டு நடப்பதாக இருந்த இந்நிகழ்ச்சி, ஒத்தி வைக்கப்பட்டு அடுத்த மாதம் சென்னையில் நடக்கிறது.இதற்காக, தமிழக அரசு ஏற்கனவே, 40 கோடி ரூபாய் செலவிட்டுள்ளது. மாசு கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள், ஒவ்வொரு நிறுவனங்களிடம் இருந்தும், 25,000 ரூபாய் முதல் 1 கோடி ரூபாய் வசூல் செய்ய பணிக்கப்பட்டு உள்ளனர். இந்த நிதி, 'ரேஸிங் புரோமோஷன்ஸ் பிரைவேட் லிமிடெட்' என்ற நிறுவனத்தின் பெயரில் வழங்கப்பட்டுள்ளன.
அவர்கள் கேட்கும் நிதி வழங்கவில்லை எனில், நிறுவனம் வாரிய நடவடிக்கையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்ற நிலை நிலவுகிறது. ரேஸிங் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனராக உதயநிதியின் நண்பரான அகிலேஷ் ரெட்டி என்பவர் இருப்பது தற்செயலானது அல்ல.இந்நிறுவனத்தின் வருமானம் மற்றும் நிதி அறிக்கையை பொது வெளியில் வெளியிட வேண்டும்.
பொதுமக்கள் கஷ்டப்பட்டு உழைத்து சேர்க்கும் பணத்தை தி.மு.க., அரசு எப்படி கொள்ளை அடிக்கிறது என்பதை தமிழக மக்கள் தெரிந்து கொள்ளட்டும். தன் தனிப்பட்ட ஆசைகளுக்கு நிதி வழங்க தமிழக மக்களை கட்டாயப்படுத்த முடியாது என்பதை உதயநிதிக்கு நினைவூட்ட விரும்புகிறோம்.அண்ணாமலை, தலைவர், தமிழக பா.ஜ.,








      Dinamalar
      Follow us