ADDED : ஜன 26, 2024 02:05 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:சென்னை வானொலியில், 'வானொலி அண்ணா' என்ற பெயரில் சிறுவர் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய என்.சி.ஞானப்பிரகாசம், 77, நேற்று சென்னையில் காலமானார்.
சேலத்தில் பிறந்த ஞானப்பிரகாசம், சென்னை வானொலியில், சிறுவர்களுக்கான நிகழ்ச்சி தொகுப்பாளராக பணியாற்றினார். பல்வேறு நுால்களை எழுதிய இவர், வானொலியில் இருந்து ஓய்வு பெற்றபின் தனியார் தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சி தயாரிப்பாளராக பணியாற்றினார்.
நேற்று இவர், உடல்நலக்குறைவால் காலமானார். இவரின் இறுதிச்சடங்கு, இன்று மாலை, சென்னை, ராயப்பேட்டை, லாயிட்ஸ் காலனியில் உள்ள இல்லத்தில் நடைபெறும்.

