ADDED : ஜன 27, 2024 02:21 AM
சென்னை:மறைந்த நடிகர் விஜயகாந்துக்கு, பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டதற்கு, முதல்வர் ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.
அவரது சமூக வலைதளப் பதிவு:
நாட்டின் இரண்டாவது உயரிய விருதான பத்ம விபூஷண் விருதுக்கு தேர்வாகி உள்ள மூத்த கலைஞர்கள் வைஜெயந்தி மாலா, பத்மா சுப்ரமணியம் ஆகியோருக்கு வாழ்த்துகள்.
பத்ம ஸ்ரீ விருதுக்கு தேர்வாகியுள்ள பத்திரப்பன், ஜோஷ்னா சின்னப்பா, ஜோ டி குரூஸ், சேஷம்பட்டி சிவலிங்கம், நாச்சியார் ஆகியோருக்கும் வாழ்த்துகள்.
தமிழகத்தில் பிறந்து, பப்புவா நியூகினியில் கவர்னர் பொறுப்பு வரை உயர்ந்த சசீந்திரன் முத்துவேல், அந்தமானைச் சேர்ந்த இயற்கை விவசாயி செல்லம்மாள் ஆகியோர் பத்ம ஸ்ரீ விருது பெறுவதற்காக, தமிழனாக பாராட்டி மகிழ்கிறேன். அண்மையில் மறைந்த என் நண்பர் விஜயகாந்துக்கும், பத்ம பூஷண் விருது அறிவித்தமைக்காக, என் நன்றி.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

