ADDED : செப் 09, 2025 03:46 AM

தேர்தலில், தோல்வியடைந்த வேட்பாளரை வெற்றி பெற்றதாக அறிவிப்பது, ஏற்கனவே நமக்கு தெரியும்; நாம் பார்த்திருக்கிறோம்.
இதுபோல, தலித் மற்றும் சிறுபான்மையினரை ஓட்டுப்போட விடாமல் தடுத்ததும் நமக்கு தெரியும். ஆனால், ஓட்டுத் திருட்டு என்பது நமக்கு புதிது. பீஹார், கர்நாடகா, மஹாராஷ்டிராவில் ஓட்டு திருட்டு நடந்துள்ளது. அதுபோல, தமிழகம், கேரளாவில் நடக்க வாய்ப்பில்லை.
தமிழகத்தில் தி.மு.க., போன்ற வலிமையான கட்சி உள்ளது. அ.தி.மு.க.,வையும் நான் குறைத்து மதிப்பிட மாட்டேன்.
இதுபோல், கேரளாவிலும் இரண்டு முக்கிய கட்சிகளின் அணிகள் உள்ளன. அதனால், அங்கும் ஓட்டு திருட்டு நடக்க வாய்ப்பில்லை. ஆனால், தமிழகத்தில் தற்போது அ.தி.மு.க., உடன் பா.ஜ., இணைந்திருப்பதால், ஓட்டு திருட்டு நடந்து விடுமோ என தோன்றுகிறது. எனவே நாம் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும்.
- -சிதம்பரம் முன்னாள் மத்திய அமைச்சர், காங்கிரஸ்

