sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

சென்னையில் கொட்டியது கனமழை; சோழிங்கநல்லுாரில் 11.9 செ.மீ., பதிவு!

/

சென்னையில் கொட்டியது கனமழை; சோழிங்கநல்லுாரில் 11.9 செ.மீ., பதிவு!

சென்னையில் கொட்டியது கனமழை; சோழிங்கநல்லுாரில் 11.9 செ.மீ., பதிவு!

சென்னையில் கொட்டியது கனமழை; சோழிங்கநல்லுாரில் 11.9 செ.மீ., பதிவு!


UPDATED : ஆக 05, 2024 10:10 AM

ADDED : ஆக 05, 2024 10:02 AM

Google News

UPDATED : ஆக 05, 2024 10:10 AM ADDED : ஆக 05, 2024 10:02 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: சென்னையில் நேற்று மாலை தொடங்கிய மழை, இன்று காலையும் வெவ்வேறு பகுதிகளில் தொடர்ந்து பெய்தது. பள்ளி, கல்லுாரிகள் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டதால், பெற்றோர், குழந்தைகள் சிரமத்துக்கு ஆளாகினர்.

சென்னை மாநகரில் நேற்று மாலை 6 மணி முதலே பல்வேறு இடங்களில் மழை கொட்டித் தீர்த்தது. இரவு விடிய விடிய மழை பெய்து கொண்டே இருந்தது. இன்று காலையும் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்ததால், பள்ளி, கல்லுாரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படும் என்று பெற்றோர் எதிர்பார்த்தனர்.

ஆனால், எதிர்பார்ப்புக்கு மாறாக, பள்ளிகள் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் பள்ளி, கல்லுாரிகள் அனைத்தும் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதனால், பள்ளி, கல்லுாரிக்கு சென்ற குழந்தைகள், பெற்றோர் பெரும் சிரமத்துக்கு ஆளாகினர். நேற்று மாலை முதல் இன்று காலை 8 மணி வரை பெய்த மழை, அதிகபட்சமாக 11.9 செ.மீ., என சோழிங்கநல்லுாரில் பதிவானது.Image 1303568

மற்ற பகுதிகளில் பதிவான மழை விவரம்:

கேளம்பாக்கம் - 10.3 செ.மீ.,அடையாறு - 10.1 செ.மீ.,எழும்பூர் - 9.20 செ.மீ.,திருவொற்றியூர் - 8.90 செ.மீ.,கத்திவாக்கம் - 8.7 செ.மீ.,கிண்டி - 8.6 செ.மீ.,

செம்பரம்பாக்கம் - 8 செ.மீ.,கொளத்தூர் - 7.90 செ.மீ.,ஸ்ரீபெரும்புதூர் - 7.40 செ.மீ.,ஆலந்தூர் - 7.30 செ.மீ.,காஞ்சிபுரம் - 7 செ.மீ.,

அண்ணா நகர், மேற்கு - 6.80 செ.மீ.,தேனாம்பேட்டை - 6.40 செ.மீ.,மணலி - 6.20 செ.மீ.,புது மணலி டவுன் - 6.10 செ.மீ.,ஐஸ் ஹவுஸ் - 6 செ.மீ.,கோடம்பாக்கம் - 5.90 செ.மீ.,அம்பத்தூர் - 5.60 செ.மீ.,முகலிவாக்கம் - 5.60 செ.மீ.,வில்லிவாக்கம் - 5.60 செ.மீ.,

திருவேற்காடு - 5.50 செ.மீ.,உத்தண்டி -5.40 செ.மீ.,மதுரவாயல் - 4.80 செ.மீ.,திரு.வி.க., நகர் - 4.70 செமீ.,புழல் - 4.50 செ.மீ.,வளசரவாக்கம் - 4.50 செ.மீ.,மீனம்பாக்கம் - 4.50 செ.மீ.,நுங்கம்பாக்கம் - 4.4 செ.மீ.,மடிப்பாக்கம் - 4.30 செ.மீ.,

குன்றத்தூர் - 4.10 செ.மீ.,மாம்பாக்கம் - 4 செ.மீ.,சோமங்கலம் - 4 செ.மீ.,பெருங்குடி - 4 செ.மீ.,வானகரம் - 4 செ.மீ.,

இது தவிர, மாநிலத்தின் வேறு சில பகுதிகளிலும் நல்ல மழை பதிவாகியுள்ளது. அரியலுாரில் 5.5 செ.மீ., பெரம்பலுார் 4.7, நெய்வேலியில் 11.6 செ.மீ., கடலுார் 7.8, காஞ்சிபுரம், ஸ்ரீ பெரும்புதுார் தலா 7 செ.மீ., மழை பதிவானது.

மேட்டூர் அணை

மேட்டூர் அணையில் இன்று காலை 8 மணிக்கு நீர் இருப்பு 120 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 73,330 கன அடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து 9 மணி முதல் வினாடிக்கு 50 ஆயிரம் கன அடி தண்ணீர் காவிரியில் வெளியேற்றப்படுகிறது.

கோவை மாவட்டம், பொள்ளாச்சி அணைகளின் இன்றைய நீர் இருப்பு நிலவரம்:


சோலையார் அணை

நீர்மட்டம்: 161.07/160 அடிநீர்வரத்து: 2189.62 கன அடிவெளியேற்றம்: 2412.77 கன அடி

பரம்பிக்குளம் அணை:

நீர்மட்டம்: 67.88/72 அடிநீர்வரத்து: 2707 கன அடி.வெளியேற்றம்: 127 கன அடி

ஆழியார் அணை:

நீர்மட்டம்: 119.10/120 அடி.நீர்வரத்து:700 கன அடி.வெளியேற்றம்:538 கன அடி.

Image 1303569

உடுமலை திருமூர்த்தி அணை

நீர்மட்டம்:28.37/60 அடிநீர்வரத்து: 111 கன அடிவெளியேற்றம்: 26 கன அடி

அமராவதி அணை

நீர்மட்டம்: 89.05/90அடி.நீர்வரத்து:1150 கனஅடிவெளியேற்றம்: 805கன அடி.

17 மாவட்டங்களில் கனமழை கொட்டுமாம்!

இன்று மட்டும் 17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னை, திருவள்ளூர் , காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், தர்மபுரி, சேலம், தஞ்சை, திருவாரூர் , நாகை, மயிலாடுதுறை, புதுச்சேரி ஆகிய பகுதிகளில் மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us
      Arattai