தமிழகத்தில் 5 மாவட்டங்களுக்கு 2 நாட்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை
தமிழகத்தில் 5 மாவட்டங்களுக்கு 2 நாட்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை
ADDED : ஜூலை 11, 2024 02:25 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் ஆகிய 5 மாவட்டங்களில் நாளை (ஜூலை 12) மற்றும் நாளை மறுநாள் (ஜூலை 13) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இன்று (ஜூலை 11) இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் ஆகிய 5 மாவட்டங்களில் நாளை(ஜூலை 12) மற்றும் நாளை மறுநாள் (ஜூலை 13) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
இந்த 5 மாவட்டங்களுக்கும் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னையில் மாலை அல்லது இரவு வேளையில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.