திருச்சியில் 'வெல்லும் ஜனநாயகம்' மாநாடு: வி.சி.,க்கள் உற்சாகம்
திருச்சியில் 'வெல்லும் ஜனநாயகம்' மாநாடு: வி.சி.,க்கள் உற்சாகம்
ADDED : ஜன 27, 2024 02:27 AM
திருச்சி:திருச்சியில் நேற்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில், 'வெல்லும் ஜனநாயகம்' மாநாடு நடைபெற்றது.
மாநாட்டில் பங்கேற்க, திருச்சி வந்த வி.சி.,க்கள் தலைவர் திருமாவளவன் அளித்த பேட்டி:
நம் நாட்டில் ஜனநாயகத்திற்கு பெரும் ஆபத்து ஏற்பட்டு உள்ளது. மீண்டும் பா.ஜ., கட்சி ஆட்சிக்கு வந்தால், அரசியலமைப்பு சட்டத்தையே துாக்கி எறிந்து விடுவர்; ஜனநாயகத்தை குழி தோண்டி புதைத்து விடுவர்; சமூக நீதியை அழித்து விடுவர்.
தேர்தல் முறையே இல்லாமல் போய் விடும். தேர்தல் என்பதே பழங்கனவாகி விடும்.
'இண்டியா' கூட்டணியில் இருந்து யாரும் வெளியே செல்வதாக கூறவில்லை; கூட்டணிக்குள் தான் இருக்கின்றனர்.
காங்கிரஸ் கட்சியுடனான பேச்சில், சுமுக தீர்வு எட்டப்படவில்லை. அதனால், தனித்து போட்டியிடுவதாக மம்தா பானர்ஜி கூறி உள்ளார். ஆனால், கூட்டணியில் இருப்பதாகத் தான் கூறியிருக்கிறார்.
மறுபடியும் பேச்சுவார்த்தைக்கு இடம் இருக்கிறது என்பது தான் பொருள். சுமுகமான தீர்வு எட்டப்படும் என்று நம்புகிறேன்.
திருச்சியில் வி.சி.,க்கள் சார்பில் நடத்தப்ப்பட்ட மாநாட்டை தொடர்ந்து கட்சியினர் உற்சாகமடைந்தள்ளனர்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

