தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/செய்திகள்/தமிழகம்/ பணிமனை மேம்பாட்டு பணி 8 ரயில் சேவையில் மாற்றம்

 பணிமனை மேம்பாட்டு பணி 8 ரயில் சேவையில் மாற்றம்

 பணிமனை மேம்பாட்டு பணி 8 ரயில் சேவையில் மாற்றம்


ADDED : ஏப் 17, 2026 04:26 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 17, 2026 04:26 AM


Favourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: புதுச்சேரி - எழும்பூர் உட்பட, எட்டு ரயில் களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து, சென்னை கோட்ட ரயில்வே அறிக்கை:

திருப்பதி - காட்பாடி இடையே மேம்பாட்டு பணிகள் நடக்க உள்ளதால், பயணியர் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது

ஆந்திரா மாநிலம் திருப்பதி - காட்பாடி காலை 6:40, காட்பாடி - திருப்பதி இரவு 7:25 மணி ரயில்கள் இன்று, 20, 24, 27, மே 1, 4, 8, 11, 15, 18, 22, 25, 29, ஜூன் 1, 5ம் தேதிகளில் ரத்து செய்யப்படுகின்றன

விழுப்புரம் - திருப்பதி காலை 5:45 ரயில் காட்பாடி வரையிலும், திருப்பதி - விழுப்புரம் மதியம் 1:40 மணி ரயில் காட்பாடியில் இருந்தும், இன்று, 20, 24, 27, மே 1, 4, 8, 11, 15, 18, 22, 25, 29, ஜூன் 1, 5ம் தேதிகளில் இயக்கப்படும்

இதேபோல், விழுப்புரம் ரயில் பணிமனையில் மேம்பாட்டு பணிகள், நாளை, 22, 25ம் தேதிகளில் நடக்கின்றன. இதனால், சில ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

திருப்பதி - புதுச்சேரி காலை 4:10 மணி ரயில் விழுப்புரம் வரையிலும், தாம்பரம் - விழுப்புரம் காலை 9:40 மணி ரயில், முண்டியம் பாக்கம் வரையிலும் இயக்கப்படும்

புதுச்சேரி - எழும்பூர் மாலை 3:35 மணி ரயில் விழுப்புரத்தில் இருந்தும், விழுப்புரம் - சென்னை கடற்கரை மதியம் 1:30 மணி ரயில், முண்டியம்பாக்கத்தில் இருந்தும் இயக்கப்படும்

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us