பிரிட்டன் பார்லி.,யில் பகவத் கீதையை வைத்து பதவியேற்ற எம்.பி.,
பிரிட்டன் பார்லி.,யில் பகவத் கீதையை வைத்து பதவியேற்ற எம்.பி.,
ADDED : ஜூலை 11, 2024 04:33 PM

லண்டன்: பிரிட்டன் பார்லிமென்டில் 29 வயதான இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஷிவானி பகவத் கீதையை வைத்து எம்.பி., ஆக பதவியேற்றார்.
நடந்து முடிந்த பிரிட்டன் பொது தேர்தலில், தொழிலாளர் கட்சி 14 ஆண்டுகளுக்கு பின் வெற்றி பெற்றுள்ளது. இந்திய வம்சாவளியான ரிஷி சுனக்கின் கன்சர்வேடிவ் எனப்படும், பழமைவாத கட்சி வரலாறு காணாத தோல்வியை தழுவியது. இதைத்தொடர்ந்து, பிரிட்டன் மன்னர் மூன்றாம் சார்லசை சந்தித்த தொழிலாளர் கட்சி தலைவர் கேர் ஸ்டாமர், அந்நாட்டின் பிரதமராக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டார்.
கன்சர்வேட்டிவ் கட்சி சார்பில், லீசெஸ்டர் கிழக்கு தொகுதியில் போட்டியிட்ட, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஷிவானி ராஜா வெற்றி பெற்றுள்ளார். அவர் பார்லிமென்டில் பகவத் கீதையை வைத்து பதவியேற்றார். 'லீசெஸ்டர் கிழக்கு தொகுதியை பிரதிநிதித்துவபடுத்துவது தனக்கு பெருமையாக இருக்கிறது' என எக்ஸ் சமூகவலைதளத்தில் ஷிவானி பதிவிட்டுள்ளார்.