பிரிட்டன் மன்னர் மூன்றாம் சார்லஸ் மருத்துவமனையில் ‛அட்மிட்'
பிரிட்டன் மன்னர் மூன்றாம் சார்லஸ் மருத்துவமனையில் ‛அட்மிட்'
UPDATED : ஜன 27, 2024 02:16 PM
ADDED : ஜன 27, 2024 02:10 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
லண்டன்: புராஸ்டேட் சிகிச்சைக்காக பிரிட்டன் மன்னர் மூன்றாம் சார்லஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத் மறைவையடுத்து அவரது மகன் சார்லஸ் பிரிட்டனின் மன்னராக கடந்த 2022-ம் ஆண்டு அறிவிக்கப்பட்டு பின் முறைப்படி மன்னர் மூன்றாம் சார்லஸாக முடிசூட்டிக்கொண்டார்.
இந்நிலையில் கடந்த சில மாதங்களாக புராஸ்டேட் சுரப்பி வீக்கம் காரணமாக மன்னர் மூன்றாம் சார்லஸ் அவதியுற்று வந்ததாகதாக கூறப்படுகிறது. இதை குணப்படுத்து லண்டனில் உள்ள மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டதாக அரண்மணை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அறுவை சிகிச்சையையொட்டி மன்னரின் அனைத்து பொது நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டன.

