ADDED : ஜூன் 11, 2025 06:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஜெருசலம் : மேற்காசிய நாடான உக்ரைன், காசாவை கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹமாஸ் பயங்கரவாதிகள் இடையே போர் நடந்து வருகிறது. காசா மற்றும் மேற்கு கரை அடங்கியது, பாலஸ்தீனம்.
மேற்கு கரை பகுதியில் உள்ள பாலஸ்தீனர்களுக்கு எதிராக வன்முறையைத் துாண்டியதாக, இரண்டு இஸ்ரேல் அமைச்சர்கள் மீது, பொருளாதார தடை விதிப்பதாக, பிரிட்டன், ஆஸ்திரேலியா, கனடா, நியூசிலாந்து, நார்வே அறிவித்துள்ளன.
இஸ்ரேல் அமைச்சர்கள் இதாமர் பென்கிவிர், பெசலெல் ஸ்மோட்ரிச் ஆகியோருக்கு சொந்தமாக இந்த நாடுகளில் உள்ள சொத்துக்கள் முடக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த நாடுகளுக்கு, அந்த அமைச்சர்கள் பயணம் செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.