இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்: இந்திய அணி பேட்டிங்
இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்: இந்திய அணி பேட்டிங்
ADDED : ஜூன் 20, 2025 04:03 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
லீட்ஸ்: இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்கிறது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (2025-27) நான்காவது சீசன் துவங்கியது. இதன் ஒரு பகுதியாக இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி, 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ('ஆண்டர்சன்-சச்சின்' டிராபி) பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் இன்று லீட்சில் உள்ள ஹெடிங்லி மைதானத்தில் துவங்கியது. கோலி, ரோகித், அஷ்வின் ஓய்வு பெற்ற நிலையில், இந்திய டெஸ்ட் அணியின் புதிய கேப்டனாக சுப்மன் கில் களமிறங்கினார்.
'டாஸ்' வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் ஸ்டோக்ஸ், பீல்டிங் தேர்வு செய்தார். இந்திய அணியில் சாய் சுதர்சன் அறிமுக வாய்ப்பு பெற்றார். கருண் நாயர் 7 ஆண்டுக்குப் பின் மீண்டும் டெஸ்ட் அணியில் இடம் பெற்றார்.