sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 16, 2026 ,பங்குனி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

200 டாலராக உயரும்!

/

200 டாலராக உயரும்!

200 டாலராக உயரும்!

200 டாலராக உயரும்!


Google News

Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் அவர்களது கூட்டாளிகளுக்கு, ஹார்முஸ் ஜலசந்தி வழியாக, ஒரு லிட்டர் எண்ணெய் கூட செல்ல அனுமதிக்க மாட்டோம். அவர்களுக்காக செல்லும் எந்தக் கப்பலும், சட்டப்பூர்வ இலக்கு தான். பிராந்திய பாதுகாப்பை நீங்கள் சீர்குலைத்துள்ளீர்கள். கச்சா எண்ணெ ய் விலை, ஒரு பேரல், 200 டாலராக உயர்வதை தாங்கிக் கொள்ள உலக நாடுகள் தயாராக வேண்டும். இப்ராஹிம் ஜோல்பகாரி செய்தித் தொடர்பாளர், ஈரான் ராணுவம்.

இந்திய

@subboxhd@மாலுமி பலி!



கச்சா எண்ணெய் டேங்கர்களுடன் சென்ற அமெரிக்காவுக்கு சொந்தமான சரக்கு கப்பல் மீது ஈரான் படையினர் நிகழ்த்திய தாக்குதலில் இந்தியர் ஒருவர் உயிரிழந்தார். அமெரிக்காவுக்கு சொந்தமான, மார்ஷல் தீவு கொடியுடன் சென்ற 'சேப் ஷீ விஷ்ணு' என்ற சரக்கு கப்பல், ஈராக்கின் பஸ்ரா அருகே பெர்சியன் வளை குடாவில் தாக்கப் பட்டது. நீருக்கடியில் செல்லும் ட்ரோன் மூலம் இரண்டு எண்ணெய் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக ஈரான் தெரிவித்தது. மால்டா கொடியுடன் சென்ற மற்றொரு கப்பல் 'செபிரோஜ்' என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.

துபாயில் ட்ரோன் தாக்குதல்!


துபாயின் மையப் பகுதியில் மீண்டும், 'ட்ரோன்' எனப்படும் ஆளில்லா சிறிய விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டதில், அப்பகுதியே புகை மண்டலமானது. ஈரான் நடத்திய இந்த தாக்குதல்களில், துபாய் க்ரீக் ஹார்பர், பாம் ஜுமெய்ரா, மரீனா பகுதிகளில் தீ விபத்துகளும், சிறு சேதங்களும் ஏற்பட்டன. இந்நிலையில், அல் பதா குடியிருப்பு பகுதியில் சிறிய ட்ரோன் வெடித்து சிதறியதை அதிகாரிகள் உறுதிப் படுத்தியு ள்ளனர். இதனால் யாருக்கும் எந்த காயமோ அல்லது கட்டட சேதமோ ஏற்படவில்லை என்றும் அவர்கள் கூறினர். ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ராணுவம் தங்கள் ஏவுகணை தற்காப்பு அமைப்புகளை முழு அளவில் செயல்படுத்தி, பெரும்பாலான தாக்குதல்களை தடுத்து வருவதாகவும் துபாய் அதிகாரிகள் குறிப் பிட்டுள்ளனர்.



ஈரான் ஆட்சி கவிழாது: அமெரிக்கா@

@ ஈரானில் ஆட்சி கவிழ்வதற்கு வாய்ப்பு இல்லை என்று அமெரிக்க உளவுத் துறை தெரிவித்து உள்ளது. ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்ட பின், அவரது மகன் மொஜ்தபா க மேனி புதிய உச்ச தலைவராக நியமிக்கப்பட்டு உ ள்ளார். ஈரானில் 13 நாட்களாக போர் நீடிக்கும் நிலையிலும், ஆட்சி உறுதியாக இருப்பதாகவும், மக்களிடையே பெரிய அளவிலான கிளர்ச்சியோ அல்லது பிரிவினையோ இல்லை என்றும் அமெரிக்க உளவுத் துறை தெரிவித்துள்ளது. கமேனி அரசு, மக்கள் மீது தன் கட்டுப்பாட்டை இன்னும் தக்க வைத்துள்ளது என்றும் அது கூறியுள்ளது.






    • Dinamalar Events


    Dinamalar